செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதிய கல்விக் கொள்கையை இவங்களா பேசிக்கிறது உலகமே வரவேற்கிறது என்று… எங்கய்யா வரவேற்குது, நீயா பேசிக் கொண்டிருக்கிற, எங்க வரவேற்குது ? சமஸ்கிருதம், இந்தி படித்து உலக நாட்டுக்கு போய் நான் என்ன பண்ண போறேன் ?
கல்வியில உலக தரத்தில முதல் இடத்தில இருக்கிற தென்கொரியா எட்டு வயசுல தான் பிள்ளையை 1ஆம் வகுப்பில் சேர்க்குது. நீ அதுல பொதுத்தேர்வு எழுதுன்னு சொல்ற. உங்க அறிவை பல காலம் அல்லாத சாக்கடையில் வைத்து தான் கழுவனும்.
உலகத்திலேயே ஒரே ஒருத்தன் தான் சாமிக்கு முன்னாடி போயிட்டு நின்னுட்டு, ஏய் எனக்கு ஏன் இவ்வளவு அறிவு கொடுத்த? பூரா பயிலும் முட்டாப் பயலா படைச்சிட்டு எனக்கு மட்டும் இவ்வளவு அறிவை கொடுத்து விட்டுட்டியே, சொல்லடி என்னை சிவசக்தி சுடர்மிகு அறிவுடன் ஏன் படைத்தாய் ? என்று, கேள்வி கேட்கிற ஒருத்தன் உலகத்தில் இருக்கானா அது நம்ம பாட்டன் பாரதி மட்டும்தான்.
தமிழ் திரு நாட்டு தன்னை பெற்றதாய் என்று கும்பிடுடி பாப்பா என்று பாடினான். திராவிடத்தில் இவர்கள் நாங்க தான் தமிழ்நாடு, தமிழ்நாடு என பெயர் வைத்தோம் என பீத்தி கொண்டு அலைகிறார்கள். நான் கூட கேட்டேன், பாரதி பாடின பின்னாடி வச்சீங்களா, இல்ல நீங்க வச்ச பின்னாடி பாரதி பாடினானா ? என்று கேள்வி எழுப்பினார்.