உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் இஸ்லாமிய மத வழிபாட்டு தளம் உள்ளது. இந்த மத வழிபாட்டுத்தளத்தில் மதரீதியான பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இங்கு இஸ்லாமிய மத மாணவ, மாணவிகள் மதப்பாடம் பயின்று வருகின்றனர். இந்த மத பாடங்களை இஸ்லாமிய மதபோதகர் ஒருவர் கற்பித்து வருகிறார்.
இந்நிலையில் மதப்பாடம் படிக்க வந்த 10 வயது சிறுமியை மத வழிபாடு தலத்தில் வைத்தே பாடம் எடுக்கும் அந்த மத போதகர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து தனக்கு நடந்த கொடுமை குறித்த அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியான பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போலீஸர் வழக்கு பதிவு செய்து மதபோதகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.