Categories
மாநில செய்திகள்

எம் ஜி எம் புற்றுநோய் சிகிச்சை மையம்… சென்னையில் தொடக்கம்…!!!!!

எம் ஜி எம் ஹெல்த் கேர் குழுமம் சார்பில் புற்றுநோய் சிகிச்சை மையம் சென்னையில் புதன்கிழமை தொடங்கப்பட்டிருக்கிறது. சென்னை நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் 150 படுகைகளுடன் அந்த மருத்துவமனை தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் எம் ஜி எம் ஹெல்த் கேர் இயக்குனர் டாக்டர் பிரசாந்த் ராஜகோபால் கலந்துகொண்டு பேசியபோது எம் ஜி எம் புற்றுநோய் மருத்துவமனையின் வுட் கட்டமைப்புக்காக 300 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. மேலும் 150 படுகைகளுடன் எட்டு மாடிகள் கொண்ட மேம்பட்ட வசதியுடன் நிறுவப்பட்டிருக்கிறது. அதி நவீன கட்டமைப்பு மற்றும் மருத்துவ நுட்பத்துடன் கூடிய வார்டுகளும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் புற்றுநோயாளிகளின் உளவியலை உணர்ந்து அவர்களுக்கு நிவாரணமும் அமைதியும் தரக்கூடிய விதமாக மருத்துவமனையின் உள் வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் புற்றுநோய் குறித்த பயத்தை அனைவரின் மத்தியிலும் இருந்து விளக்கினால் உலகம் சிறந்ததாக இருக்கும். எங்களது நிபுணத்துவம் மிக்க மருத்துவ குழு மற்றும் உயர் தொழில்நுட்பம் போன்றவை புற்று நோயாளிகளின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பது உறுதியாகும். எம் ஜி எம் புற்றுநோய் மருத்துவமனை அனைத்து நோயாளிகளுக்கும் தரமான தொடர்ச்சியான சிகிச்சை வழங்குகிறது இது எங்களது பயணத்தின் ஒரு மைக்கல் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |