Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காவல் துறையினரைத் தகாத வார்த்தைகளில் பேசிய மூன்று பேர் கைது

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரைத் தகாத வார்த்தைகளில் பேசிய மூன்று பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை இருகூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி அருகே சிங்காநல்லூர் காவல் நிலையத்தின் தலைமை காவலர் ஜான்சன் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஒண்டிபுதூர் இருகூர் இடையே உள்ள பெட்ரோல் பங்க் அருகில் சந்தேகத்திற்கு இடமான மூன்று நபர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இவற்றைப் பார்த்த காவலர் ஜான்சன், அவர்களிடம் விசாரித்துள்ளார்.

அப்போது அவர்கள் ஜான்சனிடம் தகாத வார்த்தைகளில் பேசியதாகத் தெரிகிறது. இந்நிலையில் அவர்கள் மூவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களை விசாரித்தபோது, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம் (26), அரூர் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி, வேலூரைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பதும் தெரியவந்தது.

இவர்கள் மூன்று பேர் மீதும் அரசு ஊழியரைப் பொது இடத்தில் தகாத வார்த்தைகளில் பேசியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்

Categories

Tech |