நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்கள் அனைவரது மன நலனை கண்காணிப்பதற்கு அரசு சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டிருப்பதாக மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னை சைதாப்பேட்டையில் உள்ள செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, தமிழகத்தில் 2017 ஆம் வருடம் முதல் நீட் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2022-ம் வருடத்திற்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இதில் தமிழகத்திலிருந்து ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 988 மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதி இருக்கின்றார்கள். இந்த நிலையில் தேசிய தேர்வு முகமையிடமிருந்து தமிழகத்திலிருந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் பெறப்பட்டு தமிழக அரசின் சார்பில் அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதற்காக தமிழ்நாடு மருத்துவ சேவைகள் துறை இயக்குனரகத்தில் 14 எனும் மருத்துவ சேவை என்னும் உதவி எண்ணில் இருந்து 50 மனநல ஆலோசகர்களும், முதல்வரின் 1100 என்னும் உதவி எண்ணில் இருந்து 60 மனநல ஆலோசகர்களும் மொத்தம் 110 மனநல ஆலோசகர்களை கொண்டு ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 988 மாணவர்களுக்கும் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
அப்படி வழங்கப்பட்ட ஆலோசனைகளில் 564 மாணவர்கள் அதிக மன அழுத்தத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு தொடர்ச்சியாக மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றது. அனைத்து பள்ளிகளின் ஆசிரியர்களையும் தங்களின் மாணவர்களை தொடர்ந்து கண்காணித்து மன அழுத்தத்தில் இருக்கின்ற மாணவர்கள் குறித்த தகவல்களை மாவட்ட மணல ஆலோசர்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது அவ்வாறு பெரும் பட்சத்தில் இந்த குழுவானது சம்பந்தப்பட்ட மாணவர் மற்றும் அவரது பெற்றோர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு தேவையான மனநல ஆலோசனைகளை வழங்கி தொடர்ந்து கண்காணித்து வருகின்றார்கள் நீட் தேர்வில் இருந்து விளக்கு பெறுவதற்காக முதல்வர் தொடர்ச்சியாக மத்திய அரசிடம் கோரிக்கைகளை வைத்து அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார் இது பற்றி முடிவினை தற்போது குடியரசுத் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சரும் எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.