பெண் பயணிகள் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தால் அவர்களை பகுதியில் இறங்கி விடக்கூடாது என்று ரயில்வே விதிமுறை உள்ளது.
நீண்டதூரம் பயணம் செய்வதற்காக மக்கள் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். இதன் காரணமாக தான் நிறையப் பேர் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ரயில் பயணத்தைத் தேர்வு செய்கின்றனர். ரயிலில் கட்டணமும் குறைவுதான். அப்படி நீங்களும் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால், இந்திய ரயில்வேயின் விதிகளைப் பற்றி கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ரயிலில் பயணம் செய்பவர்களுக்காக ரயில்வே நிர்வாகம் பல விதிமுறைகளை. கொண்டுவந்துள்ளது. அதேசமயம் பெண்களுக்கு பாதுகாப்பான விதிமுறைகளும் உள்ளது ரயில்வே விதியின்படி ரயில்களில் பயணம் செய்யும் போது ஒரு பெண் தனியாக இருந்தால் அவரிடம் டிக்கெட் இல்லை என்றால் சோதனையின்போது டிக்கெட் பரிசோதகர் அப்பெண்ணை ரயிலில் இருந்து இறக்கி விட முடியாது. பெண்கள் பாதுகாப்பு தொடர்பான இந்த விதிமுறை நீண்டகாலமாக உள்ளது.
ஆனால் ரயில்வே அதிகாரிகள் பலரும் இந்த விதிமுறைகளை சரியாக கடைப்பிடிப்பதில்லை. இந்த விதியின்படி தனியாக பயணம் செய்யும் பெண் ரயில் நிலையத்திலோ அல்லது ரயில் சந்திப்பிலோ ரயிலில் இருந்து இறங்கினால் அவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படலாம் என்பதற்காக இந்த விதியை ரயில்வே நிர்வாகம் உருவாக்கியுள்ளது. எனவே பெண்கள் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தாலும் அவரை ரயிலில் இருந்து இறங்கி விடக்கூடாது. பெண் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த விதி 1989ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஒற்றை பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.