ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கம்பைநல்லூர் அருகே கே. ஈச்சம்பாடி அணையும், இருமத்தூரில் தடுப்பணையும் இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் பெய்யும் கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள் நிரம்பியது. இதனால் கே.ஆர்.பி அணையிலிருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டதால் ஈச்சம்பாடி அணை நிரம்பியது.
இதனால் கம்பைநல்லூர், கே.ஈச்சம்பாடி, கெலவள்ளி, வெளாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, பல ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருகாமையில் இருக்கும் கிராம ஏரிகளுக்கு தண்ணீரை கொண்டு செல்ல அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.