தெலுங்கானாவின் ராம் நகர் பகுதியில் வசித்து வருபவர் முகமது சித்திக் தன் நண்பர்களுடன் சேர்ந்து விநாயகர் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்துள்ளார். அத்துடன் அதன்மேல் பந்தல் அமைத்து ஒளி விளக்குகள் மற்றும் பூக்களை கொண்டு அலங்காரம் செய்து இருக்கிறார். இது தொடர்பாக சித்திக் கூறியதாவது “18 வருடங்களாக விநாயகர் சிலையை நான் பிரதிஷ்டை செய்து வருகிறேன். ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து வாழவேண்டும் என்ற செய்தியை கூறவே இதை செய்கிறேன். எனது நண்பர்களுக்கு கூட இந்து, முஸ்லிம் என்ற பாகுபாடு கிடையாது.
அவர்கள் எங்களின் மசூதிக்கு வருவார்கள். இப்தார் விருந்தில், இந்து நண்பர்களும் பங்கேற்பார்கள். இந்த விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்ய அனைத்து அனுமதிகளையும் நான் பெற்று இருக்கிறேன். அதுமட்டுமின்றி அன்னதானமும் ஏற்பாடு செய்துள்ளேன். நான் பல வளர்ச்சி பணிகளை செய்திருக்கிறேன். இப்பகுதி மக்களும் என் மீது நிறைய மதிப்பு வைத்திருக்கின்றனர். 251 கிலோ எடையில் லட்டு வைத்துளேன். மேலே அனுமன் மற்றும் கருடர்கள் பறக்கும்படி வடிவமைத்துள்ளேன். 9வது நாளில் சிலையை நாங்கள் கரைப்போம் என அவர் கூறியுள்ளார்.