Categories
மாநில செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் அடுத்த மாதம் 31 வரை….. தமிழகத்தில் 144 தடை உத்தரவு….. இந்த மாவட்டத்தில் மட்டும்….!!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் அடுத்த மாதம் 31ஆம் தேதி வரை 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் உத்தரவிட்டுள்ளார். வரும் செப்டம்பர் 11ஆம் தேதி பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் உடைய நினைவு தினமும், அதே போல அடுத்த மாதம் 29, 30 ஆகிய தேதிகளில் கமுதி பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் நினைவு தினவிழாவை ( ஜெயந்தி, குருபூஜை) ஒட்டி ஒட்டி சட்ட ஒழுங்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வெளி மாவட்டத்தில் இருந்து வாடகை வாகனங்கள் அனுமதி இல்லாமல் வரக்கூடாது. அதேபோல ஜாதி ரீதியான சமுதாய தலைவர்கள் பேனர்கள், பிளக்ஸ் பேனர்கள் வைக்க கூடாது. ஜாதி, மத பாடல்கள் ஒளிபரப்ப கூடாது. 4 பேருக்கு மேலாக பொதுவான இடங்களில் கூடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |