ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள திம்பம் மலைப்பாதையில் மைசூர் நோக்கி பயணிகளுடன் வந்த டெம்போ டிராவலர் வாகனம் ஒன்று, எதிர் திசையில் தக்காளி ஏற்றி வந்த மினி லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
நல்வாய்ப்பாக, இந்த விபத்தில் மினிலாரி டிரைவர் லேசானக் காயங்களுடன் உயிர் தப்பினார். லாரி கவிழ்ந்ததில் அதிலிருந்த தக்காளிகள் பெருமளவு சேதமாகின.
விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.