Categories
மாநில செய்திகள்

தமிழக ஓய்வூதியதாரர்களே…. செப்டம்பர் 30 தான் கடைசி நாள்…. உடனே வேலைய முடிங்க….!!!

தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டு நேர்காணல் செய்வதற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை.திருப்பூர் மாவட்ட கருவூல அலகில் இதுவரை 2508 ஓய்வூதிய தரவுகள் மட்டும் நேர்காணல் புரியாமல் உள்ளனர். கால அவகாசம் முடிவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ஓய்வூதியத்தை தொடர்ச்சியாக பெறுவதற்கு இதுவரை ஆண்டு நேர்காணலில் பங்கேற்காத ஓய்வூதியதாரர் உடனடியாக தங்கள் மின்னணு வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

மின்னணு வாழ்நாள் சான்றிதழை ஜீவன் பிரமாநிலையத்தளம் மூலம் இந்திய தபால் துறை வங்கி, இ சேவை மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக சமர்ப்பிக்கலாம் எனவும் கருவூலத்திற்கு நேரில் சென்று சமர்ப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்னணு வாழ்நாள் சான்று சமர்ப்பிப்பதற்கு ஆதார் எண்,வங்கி கணக்கு எண் மற்றும் செல்போன் ஓடிபி தெரிவிக்க வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |