கர்நாடக மாநிலத்தில் மது போதையில் பேருந்தில் ஏற முயன்ற பயணியை தடுத்து நிறுத்தி பேருந்தில் நடத்துனர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் சுல்லியாபகுதியில் உள்ள ஈஸ்வர மங்களா பேருந்து நிலையத்தில் மது போதையில் இருந்த பயணி அரசு பேருந்தில் ஏற முயற்சி செய்துள்ளார். இதனால் நடத்துனர் பயனியை பேருந்தில் ஏறவிடாமல் தடுத்து குடையை பிடுங்கி சாலையில் வீசினார்.
இருந்தாலும் பயணி பேருந்தில் ஏற முயற்சி செய்த நிலையில் பலமுறை நடத்தினர் கூறியும் அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.இதனால் கோபமடைந்த நடத்துனர் ஒரு கட்டத்தில் பயணியை அடித்து படிக்கட்டில் நின்றவாறு மார்பில் எட்டி உதைத்த நிலையில் பயணி சாலையில் விழுந்தார். இதனைத் தொடர்ந்து பேருந்து அங்கிருந்து நகர்ந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து அந்த நடத்துனர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
#Mangalore: A KSRTC government bus (KA.21.F.002) conductor was seen physically assaulting a passenger and kicking him out of the bus today at Ishwaramanagala junction near #puttur. Reason is yet to be known. pic.twitter.com/j1Tn4iPv9k
— Mohammed Irshad (@Shaad_Bajpe) September 7, 2022