Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமா ரசிகனாக நானும் பொன்னியின் செல்வன் பார்க்க வெயிட்டிங்… பிரபல இயக்குனர் பேச்சு…!!!!!!

மணிரத்தினம் இயக்கியிருக்கின்ற பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. இதில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், பிரபு, நாசர், சரத்குமார், ரகுமான், திரிசா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா, லட்சுமி, சோபிதா, அதிதி ராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இருக்கின்றனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்படங்கள் பலர் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் சங்கர் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது முதன்முதலாக மணிரத்தினம் சார் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்று கூறியது மிகவும் ஆர்வமாக இருந்தது. மேலும் மணிரத்ன இயக்கத்தில் பொன்னியின் செல்வன் அருமையாக இருக்கிறதே என்று நினைத்தேன் படம் எப்ப வரும் என மிகவும் எதிர்பார்த்து இருந்தேன். இறுதியில் விரைவில் வர இருக்கிறது தமிழ் சினிமா ரசிகனா மணிரத்தினம் சார் ரசிகனா பொன்னியின் செல்வன் பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |