வாணியம்பாடி அருகே புல்லூர் தடுப்பணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அரசு அறிவுறித்தியுள்ளது.
ஆந்திர அரசானது பாலாற்றின் குறுக்கே பெரும்பள்ளம் பகுதியில் 15 அடி உயர புல்லூர் தடுப்பணையை கட்டி இருக்கின்றது. இந்நிலையில் சென்ற 4 நாட்களாக வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் கன மழை பெய்து வருகின்றது. இதனால் மூன்றாவது முறையாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.
ஆற்றின் மறுக்கரையில் கனகநாச்சிஅம்மன் கோவில் இருக்கின்றது. தடுப்பணையை தாண்டி தான் அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும். இப்பொழுது தடுப்பணியில் இருந்து அதிக அளவு தண்ணீர் வருகின்ற காரணத்தினால் கோவிலுக்கு யாரும் செல்ல வேண்டாம் என ஆந்திர அரசு தடை விதித்திருக்கின்றது. மேலும் தடுப்பணையில் குளிக்கவும் கடந்த செல்லவோ கூடாது என ஆந்திரா அரசு அறிவுறுத்தியுள்ளது.