Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வேலைவாய்ப்பு பதிவு…. மாணவர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அவரவர் பயின்ற பள்ளிகளில் வேலை வாய்ப்பு பதிவு செய்யப்பட்டு வந்தது.ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு செய்யும் முறை ரத்து செய்யப்படுவதாக அரசு அண்மையில் அறிவித்தது. அதனால் பத்து மட்டும் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ் உடன் வேலைவாய்ப்பு அலுவலகம் அல்லது இ சேவை மையத்திற்கு நேரில் சென்று வேலை வாய்ப்பு பதிவு மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இந்நிலையில் பத்து மட்டும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நிரந்தர மதிப்பெண் சான்றிதழை பெற்ற பிறகு மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ்,ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்ட அனைத்து அசல் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று  பதிவு செய்யலாம் என அரசு தெரிவித்துள்ளது. இல்லையென்றால் மாணவர்கள் அவர்களாகவே நேரில் அல்லது வேலை வாய்ப்பு இணையதளமான www.tnvelauvaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். எனவே 10,12 ஆம் வகுப்பு மாணவர்கள் விரைந்து வேலை வாய்ப்பு பதிவை மேற்கொள்ள அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பு பதிவு செய்வது எதிர்காலத்தில் பயனளிக்கும்.

வேலை வாய்ப்புகள் பதிவு செய்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகி வேலை கிடைக்காமல் உள்ள இளைஞர்களுக்கு அரசு தற்போது உதவித்தொகை வழங்கும் திட்டத்தையும் கொண்டு வந்துள்ளது .இதன் மூலமாக ஏராளமான இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மாதம்தோறும் உதவித் தொகை பெற்று பயனடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |