Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லையில் விபத்தை தடுப்பதற்கான நடவடிக்கை”….. 18 இடங்களில் ஒளிரும் விளக்குகள்….!!!!!!

நெல்லையில் விபத்தை தடுப்பதற்காக 18 இடங்களில் ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுப்பதற்காக பல்வேறு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றார்கள்.

அந்த வகையில் கன்னியாகுமாரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அரியக்குளம் அருகே படைசாமி ராசா கோவில், மூன்றடைப்பு சந்திப்பு, பானாங்குளம் சந்திப்பு, மறுகால்குறிச்சி, வாகைகுளம் அப்பா கல்லூரி, வாகைகுளம், பெருமளஞ்சி சந்திப்பு, தளபதி சமுத்திரம், வள்ளியூர் சந்திப்பு, மாஞ்சில் சந்திப்பு, வள்ளியூர், கலந்தபனை சந்திப்பு, லெப்பைகுடியிருப்பு, பணகுடி தெற்கு பாலம், நெருஞ்சி காலனி, தண்டையார்குளம், புண்ணியவாளன்புரம் உள்ளிட்ட இடங்கள் விபத்து ஏற்படும் பகுதியாக கண்டறியப்பட்டு சாலையில் விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் 18 இடங்களில் 30 ஓடிடும் விளக்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றது.

Categories

Tech |