மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கருங்கடல் பகுதியில் சுடலை முத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் சைக்கிளில் சென்று சம்சா வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் விஜயராமபுரத்தில் வியாபாரத்திற்கு சென்றுவிட்டு சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சுடலைமுத்து மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சுடலைமுத்துவை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சாத்தான்குளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.