Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

3 ஆண்டுகளுக்கு பின்….. “டி20 கிரிக்கெட்டில் முதல் சதம்”….. ‘கிங்’ கோலி ரசிகர்கள் மகிழ்ச்சி..!!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக போட்டியில் தனது முதல் டி20 சதத்தை பதிவு செய்துள்ளார் கிங் கோலி..

ஆசிய கோப்பையின் கடைசி போட்டியில் இந்திய அணி, ஆப்கானிஸ்தானை நேற்று துபாயில் எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ஓப்பனிங் வீரராக கிங் கோலி களமிறங்கி அதிரடியாக பட்டையை கிளப்பினார்.. விராட் கோலியின் அதிரடி சதத்தால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 212 ரன்கள் குவித்தது.. மேலும் கே.எல் ராகுல் 62 ரன்கள் எடுத்திருந்தார்.. பின் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது.

விராட் கோலி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாகவே ரன் குவிக்க தடுமாறி வந்தார். இதனால் அவரது ரசிகர்கள் சோகத்தில் இருந்து வந்தனர். தற்போது ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். இரண்டு ஆட்டங்களில் அரைசதம் கடந்த விராட் கோலி நேற்று கடைசி லீக் போட்டியில் சதம் விளாசி ரசிகர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளார்..

விராட் கோலி கடைசியாக 2019 ஆம் ஆண்டு வங்காள தேசத்துக்கு எதிராக பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் தான் சதம் அடித்து இருந்தார்.. தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 61 பந்துகளில் 6 சிக்ஸர், 12 பவுண்டரியுடன் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல்  களத்தில் இருந்துள்ளார்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு இது முதல் சதமாகும். ஒட்டுமொத்தமாக இது 71 ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார் கோலி.. அடுத்த மாதம் டி20 உலக கோப்பை வர உள்ள நிலையில் கிங் கோலி ஃபார்முக்கு திரும்பியதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Categories

Tech |