Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

‘கிங்’ இஸ் பேக்… செம இன்னிங்ஸ்…. சதமடித்த கோலிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வீரர்கள்..!!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்த விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக பார்ம் இல்லாமல் தவித்து வந்ததால் கடும் விமர்சனங்களை சந்தித்தார்.. ஒருபுறம் ஆதரவும், மறுபுறம் அவருக்கு எதிராகவும் கருத்துக்கள் வந்த வண்ணம் இருந்தன.. இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார் கோலி.

இந்த ஆசிய கோப்பையின் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தானை நேற்று துபாயில் எதிர்கொண்டது இந்திய அணி. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ஓப்பனிங் வீரராக கிங் கோலி களமிறங்கி அதிரடியாக ஆடி சதம் விளாசியதால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 212 ரன்கள் குவித்தது.. மேலும் கே.எல் ராகுல் 62 ரன்கள் எடுத்திருந்தார்.. பின் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. இதனால் ஆறுதல் வெற்றியுடன் தொடரிலிருந்து வெளியேறியது இந்திய அணி.

விராட் கோலி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாகவே ரன் குவிக்க தடுமாறி வந்ததால் அவர் எப்போது பழைய கோலியாக வருவார் என்று  அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளார் கோலி. ஆசிய கோப்பை தொடரின் இரண்டு ஆட்டங்களில் அரைசதம் அடித்த விராட் கோலி நேற்று கடைசி லீக் போட்டியில் சதம் விளாசி ரசிகர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளார்..

விராட் கோலி கடைசியாக 2019 ஆம் ஆண்டு வங்காள தேசத்துக்கு எதிராக பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் தான் சதம் அடித்து இருந்தார்.. தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 61 பந்துகளில் 6 சிக்ஸர், 12 பவுண்டரியுடன் 122* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்துள்ளார்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு இது முதல் சதமாகும். ஒட்டுமொத்தமாக இது 71 ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார் கோலி..

அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடங்க உள்ள நிலையில் கிங் கோலி திடீரென ஃபார்முக்கு திரும்பியதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.. 1020 நாட்கள் & 83 இன்னிங்ஸ்க்கு பிறகு முதல் சதம் பதிவு செய்த விராட் கோலிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரெய்னா ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், முதல் டி20 சதம், உங்களுக்கு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி கோலி… இத்தகைய அற்புதமான இன்னிங்ஸுக்கு நீங்கள் மகத்தான மரியாதைக்கு முற்றிலும் தகுதியானவர் என்று குறிப்பிட்டுள்ளார்..

அதேபோல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ட்விட்டர் பக்கத்தில், சபாஷ் சாம்பியன் கோலி. உங்களுக்கு 100 கிடைத்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.. மேலும் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

அதேபோல கோலியின் நண்பரும், தென்னாப்பிரிக்க வீரரும், ஆர்சிபி அணியின் முன்னாள் வீரருமான ஏபி டி வில்லியர்சும் பாராட்டியுள்ளார்..

Categories

Tech |