Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் பச்சோந்தியை விட அதிகமா மறிக்கிட்டே இருப்பாரு… புசுக்குனு காட்டம விமர்சித்த எடப்பாடி …!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக கட்சியை முடக்க எப்படி முடியும் ? நீங்களே சொல்லுங்க. புகார் எது வேணுமானாலும் கொடுக்கலாம். புகார் யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதற்கு ஆதாரம் வேண்டுமெல்லவா ?

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரைக்கும் 2663 பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அதிலே 96 சதவீதம் பொதுக்குழு உறுப்பினர்கள் எங்கள் தரப்பில் இருக்கின்றார்கள். சட்டமன்ற உறுப்பினர்களை பார்க்கின்ற பொழுது பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களிடமும், ஒரு மூன்று,  நான்கு பேரை தவிர்த்து மற்றவர்களெல்லாம் எங்களோடு இருக்கிறார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்க்கின்றபோது பெரும்பாலானவர்கள் எங்களிடம் இருக்கிறார்கள். ஒரு கட்சிக்கு தேவை அந்த கட்சியின் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற அனைத்தும் எங்களிடத்திலே இருக்கின்றது.

சட்ட ரீதியாக யாரும் எதையும் செய்து விட முடியாது. ஓபிஎஸ் நினைத்து, நினைத்து பேசுவார். அவருக்கு சாதகமா எது இருக்குதோ,  அதுக்கு தகுந்த மாதிரி, சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி, பேச்சை மாற்றிக் கொள்வார். பச்சோந்தி தெரியும் இல்லையா ? அடிக்கடி கலரும் மாறும். அதைவிட அதிகமா கலர் மாறுபவர் ஓபிஎஸ் என தெரிவித்தார்.

Categories

Tech |