பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் அரசு பள்ளி முதலிடம் பிடித்தது.
திருச்சி மாவட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 50 பள்ளிகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டது. இந்த போட்டியில் 19 வயதுக்குட்டபட்ட பிரிவு இறுதி ஆட்டத்தில் பிஷப்ஹீபர் பள்ளி அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
17 வயது குட்பட்ட பிரிவில் திருச்செந்துறை அரசு பள்ளி 1-0 இன்று போல் கணக்கில் பிஷப்ஹீபர் பள்ளியை வென்று முதல் இடத்தை பிடித்தது. 17 வயதுக்குட்பட்ட ஒரு பிரிவில் செயிண்ட் ஜோசப் பள்ளி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முதலிடம் பிடித்த இந்த மூன்று அணிகளும் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.