தமிழக முதல்வர் ஸ்டாலின் தென் தமிழகத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அதன் பிறகு அவர்களிடம் கலந்து உரையாடி தொழிலாளர்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் சீன போன்ற நாடுகளில் இருந்து சட்டபூர்வமாகவும் சட்ட விரோதமாகும் இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களின் விளைவாக தொழிற்சாலை தனது உள்நாட்டு சந்தையையும் வேகமாக இழந்து வருகிறது.
இதனால் தீப்பெட்டி தொழில் மிகவும் கடினமான கட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. தொழில் ஏற்றுமதி மூலம் ரூ.400 கோடி அந்நிய செலவாணி வருவாய் ஈட்டுகிறது. மேலும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களால் உள்நாட்டு தொழில்துறை பாதிக்கப்படுவதோடு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறது. இதனால் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் சிகரெட் ஊழியர்களின் இறக்குமதியை உடனடியாக தடை செய்வதோடு சட்டவித இறக்குமதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதில் தெரிவித்துள்ளார்.