Categories
மாநில செய்திகள்

அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு!…. நாங்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது…. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிரடி பேச்சு….!!!!

சென்ற ஜூலை 11ம் தேதி அ.தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்ற கலவரத்திற்கு பின் அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இதற்கிடையில் எடப்பாடிபழனிசாமி நேற்று தன் ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு சென்ற நிலையில், விரைவில் தாங்களும் செல்ல இருப்பதாகவும் அதற்கு உரிய பாதுகாப்பு வழங்ககோரி ஓபிஎஸ் ஆதரவாளான ஜேசிடி பிரபாகர் சென்னை ராயப்பேட்டை E2 போலீஸ் நிலையத்தில் மனு வழங்கினார்.

காவல் ஆய்வாளரிடம் மனு வழங்கிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த பேசிய ஜேசிடி பிரபாகர், தன் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளிலிருந்து தன்னை காப்பாற்றிகொள்ள எடப்பாடி பழனிச்சாமி திமுகவுடன் ஒப்பந்தம் போட்டு செயல்பட்டு கொண்டிருக்கிறார். இதனால் தான் ஓ.பன்னீர் செல்வத்தை ஒதுக்குகிறார் எனக் கூறினார். மேலும் ஓபிஎஸ் தற்போது சென்னையில் இல்லாத காரணத்தால் அவர் வந்தபின் ஆலோசனை செய்து கூடியவிரைவில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்வோம் எனக் கூறினார்.

அத்துடன் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம் அலுவலகம் போக எந்த தடையும் இல்லை. எனவே ஒபிஎஸ் அ.தி.மு.க அலுவலகம் போவதை யாராலும் தடுத்துநிறுத்த முடியாது என்று எச்சரிக்கும் அடிப்படையில் பேசினார். நாங்கள் அ.தி.மு.க அலுவலகம் போகும்போது சில சமூகவிரோதிகள் தாக்குதல் நடத்த இருக்கின்றனர். ஆகவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம் எனக் கூறினார்.

Categories

Tech |