சக்தி மாரியம்மன் கோவிலில் நேற்று வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வீரகேரளம் திம்மையா நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் சக்தி விநாயகர், சக்தி மாரியம்மன், முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவானது கடந்த 6 ஆம் தேதி முளைப்பாரி ஊர்வலத்துடன் தொடங்கி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து பிள்ளையார் வழிபாடு, திருவிளக்கு வழிபாடு போன்ற பல்வேறு பூஜைகள் நடைபெற்றுள்ளது. பின்னர் 7ஆம் தேதி காலை விமான கலசம் நிறுவுதலும் மூன்றாம் கால வேள்வி பூஜையும் நடைபெற்றுள்ளது.
இதனை அடுத்து 8 ஆம் தேதி காலை திருப்பள்ளி எழுச்சி, கலச திருக்குடங்கள் கோவிலை சுற்றி வளம் வந்து பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்த கும்பாபிஷேகத்தில் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் கோபுரத்தின் கலசத்திற்கு தீபாராதனை காண்பிக்க பக்தர்கள் மனமுருகி பிரத்தனை செய்தனர். மேலும் இந்த விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரை முன் நின்று நடத்திக் கொடுத்துள்ளனர்.