Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இந்த அரிசிக்கு ஏற்றுமதி விதி செய்ய தடை…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

அரிசி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சீனா, வியட்நாம், வங்கதேசம் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது இந்தியா குறைந்த விலையில் அரிசியை விற்பதால், உலக நாடுகள் இந்தியாவை நாடுவது அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு, உலக அளவில் 45 சதவீதம் இந்தியாவிலிருந்துதான் அரிசி ஏற்றுமதியாகும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாஸ்மதி ரக அரிசியை மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை விரும்பி வாங்குகின்றன.

பாஸ்மதி அல்லாத ரகங்களை ஆப்பிரிக்க நாடுகளும் பிற ஆசிய நாடுகளும் வாங்குகின்றன. உலகளவில் அரிசி வர்த்தகத்தில் இந்தியாவுக்கு 40% பங்கு உள்ளது. தற்போது சர்வதேச சந்தையில் நிறைய குழப்பங்கள் நீடித்து வருகிறது. இந்நிலையில்  இந்தியாவில் இருந்து உடைத்த அரிசியை ஏற்றுமதி செய்ய இன்று முதல் தடை விதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |