Categories
தேசிய செய்திகள்

ரணகளத்திலும் ஒரு குதூகலம்!…. பாஜக எம்.பி செய்த செயல்…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!!!!

பா.ஜ.க இளைஞர் அணியின் தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா பெங்களூரு பத்மநாபாநகரிலுள்ள உணவகத்தில் பட்டர் மசாலா தோசையும், உப்புமாவும் சாப்பிட்டு விட்டு அதன் ருசியை புகழும் விடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது. அதில் தோகை நன்றாக இருக்கிறது என மட்டும் சொல்லாமல், மக்கள் அனைவரும் இந்தக் கடைக்கு வந்து தோசை சாப்பிடுமாறு அவர் அழைப்பும் விடுத்திருந்தார். எனினும் அந்த விடியோ எப்போது படமாக்கப்பட்டது என்பது பற்றிய தகவல் மட்டும் இல்லை.

இருப்பினும் விடியோ செப்டம்பர் 5ம் தேதியன்று சுட்டுரையில் பகிரப்பட்டு உள்ளது. பெங்களூரு மாநகரமே வெள்ளத்தில் மூழ்கிக்கொண்டிருந்தபோது இந்த விடியோவை வெளியிட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய ஊரக ஒருங்கிணைப்பாளர் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் பெங்களூருவிலுள்ள கடையில் தோசை சாப்பிட்ட விடியோவைப் பகிர்ந்த தேஜஸ்வி சூர்யா, வெள்ளம் பாதித்த ஒரு பகுதியையாவது நேரில் வந்து பார்வையிட்டாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த விடியோவை பலரும் பகிர்ந்து தங்களது கருத்துகளையும் முன்வைத்து இருந்தனர். ரோம் நகரம் பற்றி எரியும்போது ஃபிடில் வாசித்தார் நீரோ, பெங்களூரு மூழ்கிக் கொண்டிருந்த போது தோசை சாப்பிட்டார் தேஜஸ்வி சூர்யா என ஆம் ஆத்மி தலைவர் பிரித்வி ரெட்டி குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் சிலர் ஒருபடி மேலே சென்று சூர்யாவை காணவில்லை என டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

Categories

Tech |