இந்தியாவில் விமான சேவை நிறுவனங்களில் நடைமுறை செயலில் 45% ஆக இருக்கும் விமான எரிபொருள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. விமான எரிபொருள் விலை அதிகரித்ததே விமான சேவை நிறுவனங்களின் நஷ்டம் அதிகரிக்க காரணம் என்று புகார் எழுந்துள்ளது. அதனைத் தொடர்ந்து விமான சேவை நிறுவனங்கள் நடைமுறை செலவினத்தில் 35% லிருந்து 50% அளவிற்கு டாலரில் செலுத்த வேண்டியுள்ளது.
ரூபாய் கணக்கில் டாலரின் மாற்று மதிப்பு உயர்வதாலும் விமான சேவை நிறுவனம் நஷ்டம் அதிகரிக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் விமான சேவை நிறுவனங்களின் மொத்த கடன் அளவு று.1 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2022 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இண்டிகோ நிறுவனம் ரூ.1,064 கோடியையும், ஸ்பைஸ்ஜெட் ரூ.789 கோடியையும் நஷ்டம் அடைந்துள்ளது.