சிறுத்தை கன்று குட்டியை அடித்து கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முத்துக்கல்லூர் பகுதியில் விவசாயியான கிருஷ்ணசாமி(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தோட்டத்தில் இருந்த மாடுகள் சத்தம் போட்டதால் கிருஷ்ணசாமி அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கன்று குட்டியை சிறுத்தை அடித்து கொன்றதை பார்த்து கிருஷ்ணசாமி அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கால் தடங்களை ஆய்வு செய்தபோது கன்றுக்குட்டியை கொன்றது சிறுத்தை தான் என்பது உறுதியானது. இதனால் வனத்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.