சூர்யாவின் புதிய படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
சூர்யா 42 என தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். சூர்யா மோஷன் போஸ்டரையும் பகிர்ந்துள்ளார். சூர்யா 42 ஒரு 3D படமாக இருக்கும் என்று போஸ்டர் தெரிவிக்கிறது. இப்படம் பத்து மொழிகளில் வெளியாகவுள்ளது. கதாநாயகியாக திஷா பதானி நடிக்கிறார். மற்ற நடிகர்கள் பற்றி அறிவிக்கப்படவில்லை. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.
யுவி கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி பிரமோத் மற்றும் ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.