Categories
சினிமா தமிழ் சினிமா

“ஈனத்தனம் கொண்ட நடிகர்”…. ராஜ்கிரண் பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!

நடிகர் முனீஸ் ராஜா, நடிகர் ராஜ்கிரனின் மகள் ஜீனத் பிரியாவை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இருவரும் facebook மூலம் அறிமுகமாகியதாகவும் இருவருக்கும் ஒருவர் ஒருவர் பிடித்து விட்டதால் ஜாதி, மதம் பார்க்காமல் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். இந்த திருமணத்தில் நடிகர் ராஜ்கிரனுக்கும் அவரது குடும்பத்திற்கும் விருப்பம் இல்லாததால் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளதாவது “சீரியல் நடிகர் திருமணம் செய்திருப்பது எனது மகள் இல்லை, வளர்ப்பு மகள் (பிரியா) என்று ராஜ்கிரண் தெரிவித்துள்ளார். அந்த நடிகர் குறித்து நான் விசாரித்ததில், அவர் மகா மட்டமான புத்தியும், பணத்துக்காக எதையும் செய்யும் ஈனத்தனமும் கொண்டவர் என்பது எனக்கு தெரியவந்தது. அவரது நோக்கம் பெண்ணை வைத்து வாழ்வதில்லை. எனக்கு இருக்கும் நல்ல பெயரை பயன்படுத்தி, சினிமா துறையில் வாய்ப்புகளை பெறுவதும், என்னிடமிருந்து பணம் பறிப்பதும் மட்டுமே” என குற்றம் சாட்டினார்.

Categories

Tech |