நாதஸ்வரம் தொலைக்காட்சி தொடரிலும் சில திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் முனீஸ் ராஜா. இவர் நடிகர் ராஜ்கிரன் மகன் ஜீனத்பிரியாவை காதலித்து எதிர்ப்பை மீறி ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வலைதளத்தில் தகவல் பரிவு பரவியது. இதற்கு விளக்கம் அளித்த ராஜ்கிரண், என் மகளே ஒரு தொலைக்காட்சி தொடர் நடிகர் கல்யாணம் பண்ணி இருப்பதாக ஒரு தவறான தகவல் என் பார்வைக்கு வந்தது. எனக்கு திப்புசுல்தான் நைனார் முகமது என்ற ஒரே ஒரு மகனை தவிர வேறு பிள்ளைகள் கிடையாது. இந்து மதத்தை சேர்ந்த ஒரு வளர்ப்பு மகள் இருந்தார். அவள் பெயர் பிரியா. அவர் மனம் சந்தோஷப்படுவதற்காக அவரை வளர்ப்பு மகள் என்று நான் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் சொந்த மகள் என்று சொல்லி வளர்த்தேன். முகநூல் மூலம் அவருடன் நட்பு ஏற்படுத்திக் கொண்ட சீரியல் நடிகர் என்னென்ன முறையிலோ அந்த பெண்ணை தன்வசபடுத்தி, கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு கொண்டு வந்திருக்கிறார். அந்த நடிகரை பற்றி நான் விசாரிக்க ஆரம்பத்தில், எனக்கு இருக்கும் நல்ல பெயரை பயன்படுத்தி சினிமா துறையில் வாய்ப்புகளை பெறுவது, என்னிடம் இருந்து பணம் பறிப்பது மட்டுமே அவரது குறிக்கோள் என்று தெரியவந்தது.
இதையெல்லாம் என் வளர்ப்பு பெண்ணிடம் சொன்னேன். அவர் காதில் நான் சொன்னது எதுவும் ஏறவில்லை. அதன்பிறகு அப்பாவின் மனதை வேதனைப்படுத்தி இந்த கல்யாண வேண்டாம் என்று என் மனைவி அந்த பெண்ணிடம் அழுது மன்றாடி மடி பிச்சை கேட்டு ஒரு வழியாக சரி இவர் வேண்டாம் உங்கள் விருப்பப்படி நல்ல மாப்பிள்ளை பாருங்கள் என்று சொல்ல நாங்களும் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தோம். இந்நிலையில் தான் என் மனைவியின் தோழியான லக்ஷ்மி பார்வதியை பார்த்துவிட்டு வருவதாக எங்களிடம் சொல்லிவிட்டு. இந்த பெண் ஆந்திராவிற்கு சென்று நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. இன்னும் எங்கள் வீட்டுக்கு திரும்ப வில்லை. தற்போது இப்படி ஒரு செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது. என் வளர்ப்பு பெண் ஒரு நல்ல மாப்பிள்ளை தேர்ந்தெடுத்திருந்தால் சாதி, பேதம் பார்க்காத நான் சந்தோஷமாக கட்டி வைத்திருப்பேன். ஆனால் தன் வாழ்க்கையை நாசமாக்கி கொண்டாலே என்பது மட்டுமே என் வருத்தம். இனிமேல் இவர்கள் இருவரில் யாராவது என் பேரை எதற்காக பயன்படுத்தினாலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இருவரும் என் குடும்பத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று ராஜ்கிரன் தெரிவித்துள்ளார்.