மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்களுக்கு தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கும் முறையை கடலூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் சுய தொழிலை ஊக்குவிக்க வெளியிட்டுள்ள செய்தி கூறியிருப்பதாவது “மாற்றுத்திறனாளிகளின் சுயதொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.
அதன்படி 2022-23 ஆண்டுக்கான கால்கள் பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், மிதமான மன வளர்ச்சி குறையுடைய மாற்றுத்திறனாளிகள், கடுமையான மன வளர்ச்சி குறையுடைய மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்கள் தையல் பயிற்சி பெற்றிருந்தால் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வாங்குவதற்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்காக தாய்மார்கள் தங்களுடைய அடையாள அட்டை, தையல் பயிற்சி பெற்ற சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-1, சுய முகவரியிட்ட விண்ணப்ப கடிதத்துடன் மேற்குறிப்பிட்ட ஆவணங்களின் நகல்களை இணைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், அறை எண் 112, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், புதிய கலெக்டர் அலுவலகம் வளாகம், கடலூர். என்ற முகவரிக்கு தபால் அனுப்ப வேண்டும். இது வருகிற 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன் பெற முடியும் என அவர் கூறியுள்ளார்.