இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை மறுநாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் மகாராணி எலிசபெத் காலமானார். பால்மோரல் அரண்மனையில் மகாராணியின் உயிர் பிரிந்ததாக பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது. உலகின் நீண்ட காலம் ஆட்சி செய்து சாதனை புரிந்தவர் இங்கிலாந்து ராணி எலிசபெத். 1952 ஆம் ஆண்டு மன்னர் 6ஆம் ஜார்ஜ் மறைந்த பின், அரச பதவிக்கு வகித்தவர் எலிசபெத்.
பிரிட்டனை நீண்ட காலம் ஆண்ட இரண்டாவது மகாராணி என்ற பெருமைக்குரியவர். பிரிட்டன் வரலாற்றில் விக்டோரியா மகாராணி 63 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்த சாதனையை முறியடித்தவர் எலிசபெத்.விக்டோரியா மகாராணியின் 63 ஆண்டுகால சாதனையை முறியடித்து, 70 ஆண்டுகள் அரியணையை அலங்கரித்து எலிசபெத் சாதனை.
பிரிட்டன் ராணி என்று எலிசபெத் அழைக்கப்பட்டாலும், 16 நாடுகளின் அரசியல் சாசன சட்டப்படி அரசியாக உள்ளார். 54 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட காமன்வெல்த் எனப்படும் பிரிட்டிஷ் ஆண்ட நாடுகளின் கூட்டமைப்பிலும் பொறுப்பு வகித்தார். பிரிட்டன் பிரதமர்களை தேர்வு செய்வதிலும் ராணி எலிசபெத்தின் பங்கு மிக முக்கியமானதாகும்.
இரண்டாம் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் உட்பட 14 பிரதமர்களின் காலத்தில் அரசியாக பொறுப்பு வகித்தவர். வின்ஸ்டன் சர்ச்சிலை தொடங்கி லிஸ் டிரஸ் வரை 15 பிரதமர்களை மகாராணி எலிசபெத் நியமித்துள்ளார். எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற இயற்பெயர் கொண்ட ராணி எலிசபத் 1952 பிப்ரவரி 6இல் பிரிட்டன் மகாராணியாக முடிசூடினார்.
மகாராணி எலிசபெத் காலமானதை அடுத்து மன்னராக அவரது மூத்த மகன் சார்லஸ் பதவி ஏற்கிறார்.இளவரசர் வில்லியம் உட்பட அனைத்து குடும்ப வம்சத்தினரும் பால்மோரல் அரண்மனையில் குழுமியுள்ளனர்.அமெரிக்காவில் இருக்கும் இளவரசர் ஹரி பிரிட்டனுக்கு விரைந்துள்ளார். லண்டனில் 1926 ஏப்ரல் 21 ஆம் தேதி பிறந்த மகாராணி எலிசபெத், தனது 96 வது வயதில் மறைந்த நிலையில், இந்திய பிரதமர் மோடி உட்பட உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை மறுநாள் (11ஆம் தேதி) அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அரசு முறை துக்கம் அனுசரிப்பதை முன்னிட்டு நாளை மறுநாள் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்று தெரிவித்துள்ளது.
One Day State Mourning on September 11th as a mark of respect on the passing away of Her Majesty Queen Elizabeth II, United Kingdom of Great Britain and Northern Ireland
Press release-https://t.co/dKM04U5oOn pic.twitter.com/qhiU4A7gBW
— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) September 9, 2022