Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நிறைய படம் பார்த்திருப்பார் போல…..! “மணமகனிடம் தாலியை பறித்து…. மணமகளுக்கு கட்ட முயன்ற காதலன்”…..!!!!

திருமண நேரத்தில் மணமகனிடம் இருந்த தாலியை பறித்து மணப்பெண்ணுக்கு கட்ட முயன்ற காதலனை உறவினர்கள் பிடித்துள்ளனர்.

தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரேவதி என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நிச்சயம் செய்யப்பட்டது. இவர்களின் திருமணம் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலயம் அருகே உள்ள முருகன் கோவிலில் உள்ள மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வந்தது. வேத மந்திரங்கள் முழங்க மணமகன் மணிகண்டன் தாலியை எடுத்து மணமகள் ரேவதியின் கழுத்தில் கட்ட தயாரானர்.

அந்த நேரத்தில் அருகில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென மணமகன் மணிகண்டன் கையில் வைத்திருந்த தாலியை தட்டி விட்டார். இதில் தாலி கீழே விழ அதை எடுத்து கொடுப்பது போல் நடித்த அந்த வாலிபர் மணமகனிடம் கொடுக்காமல் மணமகள் ரேவதியின் கழுத்தில் கட்ட முயன்றார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த மணமகன் அருகில் இருந்த உறவினர்கள் வாலிபரை மடக்கி பிடித்து தாலி கட்டும் முயற்சியை தடுத்தனர். அவனிடமிருந்து தாலியை பறித்தனர். பின்னர் அவர் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க முயன்றார். உறவினர்கள் மடக்கி பிடித்து விசாரணை செய்தபோது மணமகள் ரேவதியை இவர் காதலித்து வந்தது தெரியவந்தது.

தண்டையார்பேட்டை கைலாசம் தெருவை சேர்ந்த சதீஷ் என்பவர் தான் இவர். ரேவதிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து விட்டது என்று அறிந்த சதீஷ் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். எப்படியாவது திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று திட்டமிட்ட அவர் வரவேற்பு நிகழ்ச்சியின் போது மண்டபத்திற்குள் நுழைந்து அங்கும் இங்குமாய் நோட்டமிட்டு வந்துள்ளார். வீட்டில் இருப்பவர்களும் மணமகளின் நண்பர்கள் என்று சாதாரணமாக நினைத்து விட்டனர், ஆனால் தாலி கட்டும் நேரம் இது போன்ற காரியத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் மணமகள் ரேவதி தனது காதலன் குறித்து தனது வருங்கால கணவரிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. திருமணத்திற்கு முன்பு வரை மணமகன் மணிகண்டனிடம் சாதாரணமாக பேசி வந்துள்ளார் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |