இந்திய ரிசர்வ்வங்கி வட்டிகளுக்கான ரெப்போ விகிதத்தை உயர்த்தியதை அடுத்து அனைத்து வங்கிகளும் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துவிட்டது. அதாவது அனைத்து அரசு தனியார் வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களுக்கான நிலையான வைப்புத்தொகை வட்டி விகிதங்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்திய ரிசர்வ் வங்கி புது நிலையான வைப்புத்தொகைக்கான விதிமுறைகளில் சில மாற்றங்களை அறிவித்து உள்ளது.
அதன்படி உரிமை கோரப்படாத (அல்லது) காலாவதியான நிலையான வைப்புத்தொகைகளுக்கு செலுத்தப்படும் வட்டி குறித்த விதிமுறைகளில் மாற்றங்களை இந்திய ரிசர்வ்வங்கி அறிவித்து இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புது விதிமுறையின்படி, ஒரு டேர்ம் டெபாசிட் முதிர்ச்சியடைந்து வருமானம் செலுத்தப்படாமல் இருப்பின், அந்த உரிமை கோரப்படாத தொகைக்கு குறைந்தவட்டி விகிதம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் வைப்புத் தொகை முதிர்ச்சியடையும்போது அந்த வாடிக்கையாளர் நிலையான வைப்புத்தொகையை திரும்பப் பெற வேண்டாம் என முடிவு செய்தால் நிலையான வைப்புத்தொகையின் முதிர்வுக்கு பிறகு குறைந்த வட்டி கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உரிமை கோரப்படாத நிலையான வைப்புத் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வட்டி விகிதம் (அல்லது) சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து ரிசர்வ்வங்கி அறிவித்துள்ள நிலையான வைப்புத்தொகைக்கான புது விதிமுறை இந்தியாவிலுள்ள அனைத்து வணிக வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் உள்ளூர் பிராந்திய வங்கிகளுக்கான வைப்புத் தொகை அனைத்துக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.