காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய லாரியை கிராம மக்கள் மீட்டனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள மாக்கம்பாளையம் வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அரசு பேருந்து சர்க்கரை பள்ளம் வரை சென்று பயணிகளை இறக்கிவிட்டு திரும்ப வருகிறது. மலை கிராம மக்கள் காட்டாற்றை கடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் சிலர் மாக்கம்பாளையம் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு மினி லாரியில் சென்றனர்.
பின்னர் திரும்பி வரும்போது மினி லாரி வெள்ளத்தில் சிக்கியது. இதனால் லாரியில் இருந்தவர்கள் கீழே இறங்கி டிராக்டர் மற்றும் பொக்லைன் இயந்திரங்களை வரவழைத்தனர்க்ஷ இதனை அடுத்து கயிறு கட்டி டிராக்டர் லாரியை இழுக்க பொக்லைன் இயந்திரத்தை வைத்து மினி லாரியை தள்ளியுள்ளனர். பின்னர் லாரி கரைக்கு இழுத்து வரப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.