தெலுங்கானா மாநிலம், விஜயவாடா என்ற பகுதியை சேர்ந்த கிரிதர் ரேணுகா தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. கிரிதர் கூலி தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்த வருமானம் போதாத காரணத்தினால் அவர்கள் குடும்பத்துடன் குடிமல் கபூர் என்ற பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். அங்கு கிரிதருக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த மனைவி அந்த பெண்ணுடன் இருக்கும் பழக்கத்தை விடும்படி கேட்டுள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து அந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இதனால் மனைவி வற்புறுத்தலின்படி அங்கிருந்து 10 நாட்களுக்கு முன்பு தரியா பாக் என்ற பகுதிக்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர்.
அங்கு சென்ற பிறகும் தொடர்ந்து அந்த பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிய கணவர் அசதியில் தூங்கிவிட்டார். அப்போது மனைவி அங்கு சென்று விட்டு தான் வந்துள்ளார் என்று நினைத்து அடுப்பில் வைத்திருந்த கொதிக்கும் எண்ணெயை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த கணவன் மீது ஊற்றியுள்ளார். சூடான எண்ணெய் பட்டதும் அலறி துடித்தார் கிரிதர். இந்த அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் காவல் துறைக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்திற்கு வந்தவர்கள் மனைவி ரேணுகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.