Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை” பெண் போலீசாரின் பரபரப்பு புகார்…. சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது….!!

பாலியல் தொந்தரவு அளித்த சப்-இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அப்பர் குன்னூர் காவல் நிலையத்தில் சரவணன்(50) என்பவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் திருமணமாகி விவாகரத்து பெற்ற பெண் போலீசாரிடம் ஆசை வார்த்தைகள் கூறி சரவணன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதனால் உயர் அதிகாரிகள் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டரை மஞ்சூர் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்தனர்.

இந்நிலையில் சரவணன் மீதான நடவடிக்கை தனக்கு திருப்தி அளிக்கவில்லை எனவும், மேல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பெண் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதனால் பாலியல் தொந்தரவு அளித்த சரவணன் மீது போலீசார் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |