பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் மறைவையொட்டி பால் மோரல் கோட்டையின் வெளியில் நாட்டு மக்கள் மலர் வளையங்கள் வைத்து இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத், தன் 96 வயதில் நேற்று, உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். கடந்த இரு தினங்களாக அவர் உடல் நலம் சரியில்லாமல் இருந்ததாக கூறப்பட்டு வந்தது. இதனையடுத்து, கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருந்தார்.
இதற்கிடையில் பால் மோரல் இல்லத்தில் நேற்று அவர் உயிரிழந்தார். உலக தலைவர்கள், அவரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். மகாராணியார் தன் இறுதிக் காலத்தில் இருந்த ஸ்காட்லாந்தில் இருக்கும் பால் மோரல், கோட்டையின் வெளியில் அதிகப்படியான மக்கள் திரண்டு மலர் வளையங்கள் வைத்து மரியாதை செலுத்தியுள்ளனர்.