சில தினங்களாக நடிகை அதிதிராவ், சித்தார்த்துக்கும் காதல் என்று கிசுகிசு பரவி வந்தது. இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு இருவரும் ஒரே காரில் வந்து இறங்கினார்கள். விழா நடைபெறும் இடத்திலும் ஒன்றாகவே அமர்ந்து நிகழ்ச்சியை ரசித்தனர்.
இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள்இருவரின் காதல் உறுதியானதாக பதிவிட்டு வருகின்றனர். அதிதிராவ் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது