Categories
உலக செய்திகள்

பிற நாடுகளுடன் உறவை மேம்படுத்துவதில்…. இந்திய வம்சாவளியினர் பாலமாக இருக்கிறார்கள்… -பியூஸ் கோயல்…!!!

மத்திய வர்த்தகத் துறை அமைச்சராக இருக்கும் பியூஸ் கோயல், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் பிற நாடுகளுடன் உறவை பலப்படுத்திக் கொள்வதில் பாலமாக இருப்பதாக கூறியிருக்கிறார்.

அமெரிக்க நாட்டிற்கு சுற்று பயணமாக சென்றிருக்கும் மத்திய அமைச்சரான பியூஸ் கோயல், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கிருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த மக்களுடன் உரையாடினார். அதில் அவர் கூறியதாவது, அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய மக்கள் தொழில்துறை சார்ந்த வகையில் புதிய அணுகுமுறையை கொண்டிருக்கிறார்கள்.

எனினும் இந்திய பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றனர். தனித்துவம் கொண்டவர்களாக இருக்கும் இந்திய வம்சாவளியினர், இந்திய நாட்டிற்கும் பிற நாடுகளுக்கும் இடையே இருக்கும் இணைப்பு பாலமாக இருக்கிறார்கள். இந்திய நாட்டில் இருக்கும் சிறந்த வர்த்தக வாய்ப்புகள் குறித்து உலக மக்களுக்கு அவர்கள் தெரியப்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |