Categories
மாநில செய்திகள்

சிஏஏ போராட்டங்களை கண்காணிக்க சிறப்பு அலுவலர்கள் நியமனம்!

தமிழ்நாட்டில் சிஏஏ, என்.பி.ஆர், என்ஆர்சிக்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க ஆறு சிறப்பு அலுவலர்கள் நியமித்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட சி.ஏ.ஏ சட்டத்திருத்தம், என்.ஆர்.சி க்கு எதிரான போராட்டங்கள் தமிழ்நாட்டில் தொடந்து நடைபெற்று வருகின்றன. இதனால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை தலைவர் திரிபாதி வெளியிட்டுள்ள அறிக்கை

இதையடுத்து இது தொடர்பான போராட்டங்களை கட்டுப்படுத்த சிறப்பு அலுவலர்கள் நியமித்து, தமிழ்நாடு காவல்துறை தலைவர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, ஐ.பி.எஸ் அலுவலர்கள் சைலேஷ்குமார் யாதவ், சாரங்கன், ராமர், ராமகிருஷ்ணன், செந்தில்குமார் மற்றும் செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் உடனடியாக தமிழ்நாட்டில் மேற்கொளப்படும் போராட்டங்களை கட்டுப்படுத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, பொதுமக்களின் அமைதியான வாழ்வுக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என காவல்துறை தலைவர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |