செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, ஓபிஎஸ் கோவில் விசேஷத்தில் இருக்கிறார். முடித்துவிட்டு வந்து எங்களுக்கு தகவல் சொல்லுவார், என்றைக்கு கட்டளை இடுகிறார்களோ அன்றைக்கு நாங்கள் ஐம்பதாயிரம் பேர் கட்சி அலுவலகம் முன்னால் நிற்போம். நாங்கள் பிரச்சினை செய்பவர்கள் இல்லை, பிரச்சனை செய்பவர்கள் அவர்கள் தான்.
11ஆம் தேதி பொதுக்குழு நடக்கிறது விருகை ரவி ஒரு மாவட்ட செயலாளர், சத்யா ஒரு மாவட்ட செயலாளர், வேளச்சேரி அசோக் மாவட்ட செயலாளர், கே.பி கந்தன் ஒரு மாவட்ட செயலாளர், ஆதி ராஜாராம் இவர்களெல்லாம் பொதுக்குழு உறுப்பினர். பகுதி செயலாளர் எல்லோரும் இங்கே தான் இருந்தார்கள், பொதுக்குழு உறுப்பினர்களை எல்லாம் இங்க வைத்துக்கொண்டு அங்கே என்ன பொதுக்குழு நடத்தினார்கள் ? பொய் குழுவை தான் நடத்திருக்கிறார்.
வைத்தியலிங்கம் அவர்கள் சசிகலாவை எதிர்பாராமல் சந்தித்தார். தற்சமயமாக வருகிறார்கள் சசிகலா அம்மா. எதிர்பாராத சந்திப்பே தவிர வேண்டுமென்றே பார்த்ததில்லை. ஓபிஎஸ் என்ன சொன்னார் கட்சி பாகுபாடு இல்லாமல் எல்லோரும் ஒன்றிணைத்து இந்த கட்சி ஜெயிக்க வேண்டும் என்று தான் சொல்கிறார் என தெரிவித்தார்.