ஒற்றுமை பேரணி செல்லும் ராகுல் காந்தி இன்று வெள்ளை நிற டி-சர்ட்டினை அணிந்திருந்தார். அந்த டி-சர்ட்டின் விலை ரூ.41,000 என பாஜகவினர் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் கூட ‘பாரதமே பார்’ என்ற தலைப்பில் இந்த விலை விவரத்தை பதிவிட்டு இருக்கிறார்கள். மற்றொருபுறம் பிரதமர் மோடி அணியும் விலை உயர்ந்த ஆடைகளை காங்கிரசார் பதிவுசெய்து வார்த்தை போர் நடத்தி வருகிறார்கள்.
ராகுல் காந்தி மேற்கொள்ளும் பயணத்தில் அவர் 40.000 உடை அணிந்து வந்துள்ளதாக பாஜக சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டிருந்ததற்கு பதிலளித்துள்ள கொடுத்துள்ள காங்கிரஸ், “உடைகளை பற்றி விவாதிக்க வேண்டும் என்றால் மோடியின் 10 லட்சம் மதிப்புள்ள உடை, 1.5 லட்சம் மதிப்புள்ள கண்ணாடி குறித்து விவாதிக்க வேண்டியது இருக்கும். பிரச்சனைகளை பற்றி பேசுங்கள். வேலையின்மை, பணவீக்கம் குறித்து பேசுங்கள்” என கூறியுள்ளது.