பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மாணவர்களுக்கு கல்வி கொடுக்கும் நோக்கத்தில் பல சலுகைகளையும் நல திட்டங்களையும் வழங்கி வருகிறது. ஆனால் அரசின் இந்த நலத்திட்ட உதவிகள் மாணவர்கள் அனைவருக்கும் சென்று அடைவதில்லை. அதனால் தகுதியும் தேவையும் இருக்கும் மாணவர்களுக்கு இலவச கல்வி கிடைக்காமல் தனியார் கல்லூரிகளை தேடி செல்கின்றனர்.
அங்கு மாணவர்களுக்கு கல்லூரி கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழை எளிய மாணவர்கள் உயர் கல்வி படிப்பது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அந்த வகையில் உசிலம்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் நிர்ணயத்தை கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்க படுவதாக ஜெயபால் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கானது நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில் அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லூரி குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் தமிழக மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்பட வேண்டும் எனவும் வளர்ந்த நாடுகளில் மாணவர்களின் பின்புலத்தை பார்க்காமல் திறமை கல்வி தகுதி அடிப்படையில் அரசே முழு கல்வி செலவு ஏற்கிறது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் கல்லூரி மாணவர்களின் கல்வி கட்டணத்தை முறைப்படுத்துவதும் அதனை மீறோர் விதி எடுத்து நடவடிக்கை தொடர்பாக தமிழக உயர்கல்வி செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.