Categories
கிரிக்கெட் விளையாட்டு

இது வேற லெவல்….. விராட் கோலிக்கு CSK கொடுத்த Gift… பரவும் PHOTOS….!!!!!

ஆசிய கோப்பை தொடருக்கான நேற்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் ரோகித் சர்மா இல்லாததால் ஓப்பனிங்கில் கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினர். இவர்களின் ஜோடி அட்டகாசமான தொடக்கத்தை இந்திய அணிக்கு கொடுத்தது. தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய கேஎல் ராகுல் 62 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அதன் பிறகு ஆட்டத்தை  மாற்றிய விராட் கோலி ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். அதனால் 53 பந்துகளில் சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி தனது 71 வது சதத்தை பூர்த்தி செய்தார்.

கிட்டத்தட்ட 61 பந்துகளில் 122 ரன்கள் விளாசி அசத்தினார். இதில் ஆறு சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகள் அடங்கும். இதனைக் கண்டு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு 1020 நாட்களாக ஒரு சதம் கூட அடிக்காமல் இருந்த விராட் கோலி நேற்று ஸ்பெஷல் வியூகம் மூலம் தனது சதத்தை பூர்த்தி செய்தார். விராட் கோலியின் இந்த மாபெரும் சாதனை இவரின் 71 வது சதத்தை எதிர்நோக்கி காத்திருந்த ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தேடி தந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் போர் கண்ட சிங்கம் என்று எழுதப்பட்ட கோலியின் படங்களை சிஎஸ்கே அணிக்கு உரித்தான மஞ்சள் பேக்ரவுண்டில் சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ளது. கோலிதலைமை ஏற்று இருந்த பெங்களூரும் தோனி தலைமையிலான சென்னை அணியும் ஐபிஎல் போட்டிகளில் முக்கிய ரைவல்ஸ்.

Categories

Tech |