மறைந்த பிரிட்டன் மகாராணிக்கு அஞ்சலி செலுத்த மக்கள் கூடியிருந்த சமயத்தில், வானில் அதிசயமாக இரண்டு வானவில்கள் தோன்றியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் தன் 96 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார். உலக தலைவர்கள் அவரின் மறைவிற்கு இரங்கல் செய்தியை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், மகாராணியாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அதிகப்படியான மக்கள் அரண்மனை முன்பு கூடினார்கள். மழை கொட்டி தீர்த்த போதும், மக்கள் கூட்டம் குறையவில்லை. இந்நிலையில், பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகில் நேற்று வானில் இரு வானவில் தோன்றியது. இதனை பார்த்த மக்கள் ஆச்சர்யமடைந்தனர்.