Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நின்று கொண்டிருந்த தொழிலாளி…. சுத்தியலால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த நபர்…. போலீஸ் விசாரணை….!!

தொழிலாளியை தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம் வடக்கூர் பகுதியில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரும் பரமன்குறிச்சி பகுதியில் வசிக்கும் பட்டுராஜன் என்பவரும் குலசேகரபட்டினம் பகுதியிலுள்ள ஒரு சிமெண்ட் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 6-ஆம் தேதி பால்ராஜ் வேலை பார்க்கும் கடை முன்பு நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மது போதையில் வந்த பட்டுராஜன் பால்ராஜை சுத்தியலால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பால்ராஜ் குலசேகரப்பட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பட்டுராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |