Categories
உலக செய்திகள்

இப்பவாச்சும் திருப்பி கொடுங்க….! கோகினூர் வைரம் இந்தியாவிற்கு கொடுக்குமா பிரிட்டன்….? எழுந்த கோரிக்கை….!!!!!

இந்தியாவில் வெட்டப்பட்டு பல நூற்றாண்டுகளாக ஒரு ஆளும் வம்சத்திலிருந்து மற்றொரு ஆளும் வம்சத்திற்கு சென்றது உலகின் மிகச்சிறந்த வைரங்களில் ஒன்றான கோகினூர் வைரம். இந்த வைரம் கடைசியாக 1813 ஆம் ஆண்டு சீக்கிய அரசு மகாராஜா ரஞ்சித் சிங்கிடமிருந்து அவர் இந்த வைரத்தை அவருடைய கிரீடத்தில் பதித்து வைத்திருந்தார். பின்னர் அவருடைய மகன் திலீப் சிங்கிடம் சென்றது. 1849 ஆம் வருடம் பிரிட்டிஷ் படையெடுப்பில் அந்த வைரம் திருடப்பட்டு பிரிட்டன் கொண்டு செல்லப்பட்டது. மகாராணி விக்டோரியா பேரரசியாக அறிவித்த போது இந்த வைரம் பிரிட்டிஷ் அரச ஆபரணங்களின் பகுதி ஆனது.

பலமுறை இந்திய அரசு முயற்சி செய்தும் இந்த வைரத்தை திரும்ப பெற முடியவில்லை. இந்த நிலையில் பிரிட்டிஷ் அரசி இரண்டாம் எலிசபெத் காலமான நிலையில் கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட அந்த கிரீடம் அரசவழக்கத்தின்படி புதிய ராணியான கமிலா வசம் செல்லும். இந்த நிலையில் கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட இந்த கிரீடத்தை எலிசபத்தினுடைய மறைவுக்குப் பிறகு இந்தியாவிற்கு திருப்பித் தர வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Categories

Tech |