நமக்கு உடல் பாதிக்கப்பட்டு இருக்கும்போது யாரும் மனதில் பங்கு குறித்து சிந்திப்பதில்லை.உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருக்கும்போது அதிலிருந்து உடல் நலத்தை மீட்பதில் மனம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. உடலில் எந்த நோயும் இல்லாமல் இருந்தால் மட்டுமே ஆரோக்கியமாகி விடாது. ஒருவரின் மனநலம், என அனைத்து பொதுசேவை பெற்று இருந்தால் மட்டுமே ஒருவரை ஆரோக்கியமானவர் என்று நாம் குறிப்பிட முடியும்.
எல்லாம் இருந்தும் வாழ்வில் மகிழ்ச்சி இல்லை என்றால் அது பயனில்லை. அத்தனை மகிழ்ச்சிக்கு அடிப்படை ஆரோக்கியம் தான். உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல மன ஆரோக்கியமும் முக்கியம். நம் உடலை பேணி காப்பதைப் போல மனதையும் காக்க வேண்டும். உடலும் மனதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல உடல் ஆரோக்கியம் குறைந்தால் மன ஆரோக்கியமும் குறையும் அதேபோல மன ஆரோக்கியம் குறைந்தால் உடல் ஆரோக்கியமும்.
உடலில் நோய்கள் வருவது போல மனதுக்கும் பல்வேறு தீங்குகள் தினம் தினம் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அதாவது கேலி கிண்டல் பேச்சுகள் மற்றும் உறவினர் நண்பர்களுடன் மனக்கசப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகள் மன உளைச்சல் தருபவை என கூறலாம். இது தவிர 200க்கும் மேற்பட்ட மன நோய்கள் இருக்கின்றது. மனம் எனும் ஒரு விஷயம் நம்முடைய கண்ணுக்குத் தெரியாததால் பெரும்பாலும் இவற்றை அலட்சியப்படுத்து விடுகிறோம்.
குறிப்பாக மனநோய் என்பது கவனிக்கப்பட வேண்டும் என்றால் அதன் தீவிரம் அதிகரித்தல் அல்லது ஒருவரை பார்க்கும் போது தெரியும் அளவு இருந்தாலும் அல்லது மற்றவரை பாதிக்கும் பட்சத்தில் அவை கண்காணிக்கப்படுகிறது. பெரும்பாலான மனநோய் பிறர் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாத வகையில் உள்ளது. மனநோயால் அவர்கள் படும் பாடு அதிகமாகவே இருக்கும்.
பொதுவாக மனநோய்கள் குறித்து நம் சமூகத்தில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதால் மனநல விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பலரும் மனநோய் ஆரம்பித்த கிட்டத்தட்ட 15 வருடம் கழித்து வேறு வழி இல்லாமல் மருத்துவரிடம் போகும் போது மட்டுமே சிகிச்சை பெற முன் வருகிறார்கள்.ஆனால் மனநல பிரச்சனை பள்ளி படிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் போது தற்கொலை முயற்சி மற்றும் வன்முறை உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும்.
குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் தாக்கும் மனநோயையும் அதன் அறிவுரைகளையும் தெரிந்து கொண்டு அதிலிருந்து மீள்வதற்கான முதல் படி, ஒருவரின் சிந்தனையில் மற்றும் செயல்பாடுகளில் நடத்தை மற்றும் உணர்வுகளில் மனநல பிரச்சனையின் அறிகுறி தென்படலாம். அப்படி இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்பது அவசியம். அப்படி செய்யாவிட்டால் அது குடும்பம் மற்றும் சுற்றியுள்ளவர்களை பாதிக்கும். பெற்றோருக்கு மனநோய் இருந்தால் பிள்ளைகளை பாதித்துவிடும்.
ஒருவர் சரியான மனநிலையில் இருந்தால் மட்டுமே அவரால் சரியான ஆரோக்கியமான முடிவுகள் எடுக்க முடியும். எனவே உடல் ஆரோக்கியத்தை கவனிக்கும் அளவிற்கு மன ஆரோக்கியத்தையும் அனைவரும் கவனிக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நம் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை இந்த பதிவு நமக்கு உணர்த்துகிறது.